முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியிலும், பிற பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

பாபநாசம் அணை 53, பாபநாசம் கீழ் அணை 39, சேர்வலாறு அணை 35, மணிமுத்தாறு அணை 10.2, கடனாநதி அணை 5, ராமநதி அணை 30, கருப்பாநதி அணை 24, குண்டாறு அணை 21.3, அடவிநயினார் அணை 20, நம்பியாறு அணை 6, தென்காசி 60, செங்கோட்டை 24.1, ஆய்க்குடியில் அதிகபட்சம் 80.2, ஆலங்குளம் 24.2, களக்காடு 5.2, மூலக்கரைப்பட்டி 25, பாளையங்கோட்டை 54, திருநெல்வேலி 22, அம்பாசமுத்திரம் 11, சேரன்மகாதேவி 11, கன்னடியன் அணைக்கட்டு 10.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 602.55 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 117 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 113 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 72.26 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு 35 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 15.43 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 71.90 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86.22 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62.10 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 58 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 58.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 58.73 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 84.75 அடியாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →