தாமே வடிவமைத்த இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி தேசிய பந்தயப் போட்டி: கலசலிங்கம் மாணவர்கள் 2-ம் இடம்
தாமே வடிவமைத்த இரு சக்ககர வாகனத்தைப் பயன்படுத்தி தேசிய பந்தயப் போட்டியில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
தற்போதைய செய்திகள்தாமே வடிவமைத்த இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி தேசிய பந்தயப் போட்டி: கலசலிங்கம் மாணவர்கள் 2-ம் இடம்
தாமே வடிவமைத்த இரு சக்ககர வாகனத்தைப் பயன்படுத்தி தேசிய பந்தயப் போட்டியில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
தாமே வடிவமைத்த இரு சக்ககர வாகனத்தைப் பயன்படுத்தி தேசிய பந்தயப் போட்டியில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் படிப்பவர் ஆர்.விக்னேஷ், மூன்றாம் ஆண்டு படிப்பவர்கள் சி.சங்கராஜா, எஸ்.ஜவஹர்ராஜா, ஜி.ஹரிகணேஷ்ராஜ் ஆகியோர் மற்றும் மெக்கானிக்கல் மாணவர்கள் சேர்ந்து மூன்று அணிகளாகப் பிரிந்து துறைத் தலைவர் உதயக்குமார், பேராசிரியர்கள் சாமி, பெத்துராஜ் ஆகியோர் ஆலோசனைப்படி இந்த இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.புதிய எஞ்ஜின் ஜேஸில் நீள அகலம் மாற்றி, பிரேக்கை புதிய அளவில் கூட்டி, அதிவேகமாக ஓடும் அளவில் எடைக்குறைத்து புதிய துகள்களைப் பயன்படுத்தி, மூன்று, இரண்டு சக்கர வண்டிகளை மூன்று மாதத்தில் வடிவமைத்துள்ளனர்.
பின்னர் ஒரு மாதம் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி எடுத்து, சத்தத்தை அதிகரிக்கவும், புகையைக் குறைக்கவும் புதிய புகைக்குழையை வடிவமைத்தனர்.பின்னர் மாணவர் ஆர்.விக்னேஷ், கோயமுத்தூர் கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மினி பைக் வடிவமைப்பு மற்றும் ஓட்டப் பந்தயப் போட்டியில் தனது இரு சக்கர வாகனத்துடன் கலந்து கொண்டார்.
இதில் அதிவேகமாக வண்டியை ஓட்டி 2-ம் இடம் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.மாணவர்கள் சி.சங்கராஜா, எஸ்.ஜவஹர்ராஜா, ஜி.ஹரிகணேஷ்ராஜ் ஆகிய மூவர் வடிவமைத்த இரு சக்கர வாகனம், கோயமுத்தூர் கிருஷ்ணா கல்லுரியில் நடைபெற்ற தேசிய மினி பைக் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்று இரண்டாம் இடம் பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, சனிக்கிழமை நேரில் அழைத்து வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.