விருதுநகருக்கு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நவ.4-ல் வருகை
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் நவம்பர் 4-ம் தேதி வருகிறார். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்விருதுநகருக்கு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நவ.4-ல் வருகை
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் நவம்பர் 4-ம் தேதி வருகிறார். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்.விருதுநகர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் நவம்பர் 4-ம் தேதி வருகிறார். என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராாயர் டாக்டர் எம்.பிரகாஷ் மற்றும் ஆணையக் குழு உறுப்பினர்கள் நவம்பர் 4-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அவர் சந்திக்கிறார்.
அப்போது சிறுபான்மையினத்தினருக்கு தமிழக அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்டறியப்படும். அப்போது சிறுபான்மையின கல்வி நிறுவன பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு தக்க ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.