என்.எல்.சி விவகாரம்: விரைவில் சுமூக தீர்வு எட்டப்படுமென தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர்
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் சமீபத்தில் அழைப்பு விடுத்தது. அதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்
அதன் பேரில் இன்று (7–ந் தேதி) நெய்வேலி 1–வது வட்டத்தில் உள்ள நெய்வேலி இல்லத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தினர் – தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும் முடிவு எட்டப்படவில்லை. விரைவில் முடிவு எட்டப்படுமென நம்புகிறோம். மீண்டும் நிர்வாகம் அழைக்கும் போது பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம்.
விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.