முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை மீது சர்வதேச விசாரணை: நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வைகோ வலியுறுத்தல்

இலங்கை படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

இலங்கை படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

இலங்கை அரசின் இனப்படுகொலையை எதிர்த்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்து உள்நாட்டு விசாரணை ஏற்கபுடையதல்ல. சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கையில் சுதந்திரமான தமிழ் ஈழம் அமைய வேண்டும். இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இலங்கையில் மட்டுமல்லாமல், அங்கிருந்து புலம்பெயர்ந்த உலகில் எங்கேல்லாம் வசிக்கிறார்களோ அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் உள்ள 65 ஆயிரம் இலங்கை தமிழர்களிடமும் வாக்கெடுப்ப நடத்தப்பட வேண்டும்.

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தும் வரை மதிமுக தொடர்ந்து போராடும்.

இலங்கையில் இனப்படுகொலைக்கு துணை நின்ற திமுக, காங்கிரஸ் கட்சியினை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தமிழக மக்களுக்காக போராடும் இயக்க மதிமுக.

இங்கிருந்து சிலர் வெளியேறியிருக்கலாம். மரம் வெட்ட வெட்டத்தான் அந்த மரம் துளிர்த்து வளரும். உணர்வுள்ள தொண்டர்களை கொண்ட இயக்கம். மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட இயக்குநர் புகழேந்திதங்கராஜ் பேசினார். கட்சியின் மாநில அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ. நிஜாம், மாவட்டச் செயலர் ப.ஆ. சரவணன், மாநகர் மாவட்டச் செயலர் சொ. பெருமாள், மாநில மாணவரணி செயலர் தி.மு. ராஜேந்திரன், மாநில விவசாய அணித் துணைச் செயலர்கள் கல்லத்தியான், பி. சண்முகவேல், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகம்மதுஅலி, முன்னாள் எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமார், வழக்குரைஞர் அரசுஅமல்ராஜ், இலக்கிய அணி செயலர் சுதர்சன், அவைத் தலைவர் சுப்பையா, மாவட்ட இளைஞரணி செயலர் அருள்வின்ரொட்ரிகோ, பகுதி செயலர் உசேன், சிவானந்தம், ஒன்றிய செயலர் சங்கரபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →