முகப்பு
தற்போதைய செய்திகள்

கவுகாத்தியில் கனமழை: சாலைகளில் தேங்கி நிற்கும் வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது

அஸ்சாம், கவுகாத்தியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 செப்டம்பர், 2015 at 12:52 PM
பகிர்:

அஸ்சாம், கவுகாத்தியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் ஆங்காங்கே தேங்கி  நிற்கும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். போக்குவரத்து நெரிசலால் பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்பவர் என பொதுமக்கள் சரியான நேரத்திற்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.