முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சுழி அருகே உபமின் நிலையத்தில் கம்பி வயர் திருட்டு

திருச்சுழி அருகே உபமின் நிலைய வளாக குடியிருப்பு வளாக பகுதியில் மின் கம்பி வயரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 24 செப்டம்பர், 2015 at 2:47 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:18 PM

திருச்சுழி அருகே உபமின் நிலைய வளாக குடியிருப்பு வளாக பகுதியில் மின் கம்பி வயரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சுழி அருகே பரளச்சியில் துணை உபமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குடியிருப்பு வளாகத்தில் மின்கம்பி வயர்களை வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் பணியாளர்கள் பார்க்கையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மின்கம்பி வயர் கட்டு காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உடனடியாக உபமின் நிலையத்தில் தெரிவித்தனர்.

இது குறித்து உதவி பொறியாளர் பாலசுப்பிரமணி பரளச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மின்கம்பி வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.