தற்போதைய செய்திகள்

தேசிய கடற்படை தினம்: உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை 

DIN

தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றபோது, ஆபரேஷன் திரிசூலம் மற்றும் மலைப்பாம்பு மூலம் பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதில் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT