வார்தா புயல்: புதுச்சேரி துறைமுகத்தில் அபாய எச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வார்தா புயல் காரணமாக, புதுச்சேரி துறைமுகத்தில் அபாய எச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வார்தா புயல் காரணமாக, புதுச்சேரி துறைமுகத்தில் அபாய எச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வார்தா புயல் திங்கள்கிழமை காலை, சென்னை மற்றும் ஆந்திர இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி கடலில் அலையின் வேகம் அதிகமாகவும்,உயரமாகவும் உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடலோரத்தில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே வானிலை மைய அறிவுறுத்தலை தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் அபாய எச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் காற்று 60 கி.மீ வேகத்துடன் வீசும் என்றும் மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதே போல் காரைக்கால் துறைமுகத்திலும் 8-ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.