ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம்
ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இன்றைய பொதுக் குழு கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் 9வது தீர்மானமாக ஜெயலலிதா பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக அறிவிக்கவும், பாராளுமன்றத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ வெண்கல சிலையை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.