முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி சாம்பியன்சிப் போட்டி தொடக்கம்

கலசலிங்கம் கோப்பைக்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கிடையிலான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டிகள் செவ்வாய்கிழமை மாலை விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தொடங்கின.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:25 PM
பகிர்:

கலசலிங்கம் கோப்பைக்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கிடையிலான ஜூனியர் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டிகள் செவ்வாய்கிழமை மாலை விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் தொடங்கின.

போட்டியை தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் விருதுநகர் மாவட்ட ஹாக்கி அசோஸியேசன் இணைந்து நடத்துகின்றன. போட்டிகள் இம் மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.போட்டிகள் தொடக்க விழா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிநதன் தலைமையில் நடைபெற்றது.

போட்டியை பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் முன்னிலையில், இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் தொடங்கி வைத்தார்.லீக் முறையில் நடைபெறும் இந்த விளையாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இப் போட்டியில் முதல் 50 இடத்தைப் பிடிப்போரில் 18 பேர் கொண்ட தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

இந்த அணி ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறவுள்ள தேசிய ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ளும்.செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியின் முடிவுகள்:திருவாரூர் மாவட்ட அணியை திண்டுக்கல் மாவட்ட அணி 2 க்கு 9 என்ற கோல் கணக்கில் வென்றது. கிருஷ்ணகிரி மாவட்ட அணியை அரியலூர் மாவட்ட அணி 0-க்கு 4 என்ற கோல் கணக்கில் வென்றது.

நீலகிரி மாவட்ட அணியை திருப்பூர் மாவட்ட அணி 0-க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்றது.திருவண்ணாமலை மாவட்ட அணியை திருநெல்வேலி மாவட்ட அணி 0-க்கு 4 என்ற கோல் கணக்கில் வென்றது. வேலூர் மாவட்ட அணியை திருச்சி மாவட்ட அணி 1-க்கு 4 என்ற கோல் கணக்கில் வென்றது. தேனி மாவட்ட அணியை காஞ்சிபுரம் மாவட்ட அணி 0-க்கு 5 என்ற கோல் கணக்கில் வென்றது. புதுக்கோட்டை மாவட்ட அணியை தூத்துக்குடி மாவட்ட அணி 0-க்கு 8 என்ற கோல் கணக்கில் வென்றது. விழுப்புரம் மாவட்ட அணியை ராமநாதபுரம் மாவட்ட அணி 1-க்கு 5 என்ற கோல் கணக்கில் வென்றது. நாமக்கல் மாவட்ட அணியை கோயமுத்தூர் மாவட்ட அணி 0-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றது. கன்னியாகுமரி மாவட்ட அணியை விருதுநகர் மாவட்ட அணி 1-க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →