முகப்பு
தற்போதைய செய்திகள்

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 16 வயது இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 16-வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 16-வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தம்பிபட்டி, வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சு.முருகானந்தம். இவரது மகள் தனலட்சுமி (13). இவர் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்கு செல்லும் போது, மகராஜபுரம், கீழத்தெருவைச் சேர்ந்த பா.தங்கப்பாண்டி என்பவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். மகாராஜபுரம்-மாவூத்து விலக்கு பேருந்து நிலையம் அருகே நின்று தனலட்சுமியிடம் ஏன் சீக்கிரம் வரவில்லை. உனக்காக காத்துக் கொண்டு இருந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் உன்னை பாலியல் பலாத்காரம் செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பள்ளி சென்று படிக்க இயலாமல் வீட்டிற்கு வந்து தந்தையிடம் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீவுில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகானந்தம் புகார் செய்தார். தனது மகளுக்கு மன உளைச்சல், அவமானம் ஏற்பட்டுள்ளதாயும் இதனால் ஏதாவது பிரச்னை ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார் தங்கப்பாண்டியைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →