முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஆந்திரா மாநில அமைச்சர் வருகை

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஆந்திர மாநில அமைச்சர் விஜயரகுநாதரெட்டி வருகை தந்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஆந்திர மாநில அமைச்சர் விஜயரகுநாதரெட்டி வருகை தந்தார்.

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விஜயரகுநாதரெட்டி தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை காலை நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார்.

அவரை சிதம்பரம் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி மற்றும் பொதுதீட்சிதர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர் கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு தீப ஆராதனை செய்து அவருக்கு பிரசாதத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.