முகப்பு
தற்போதைய செய்திகள்

லோக் ஆயுக்த அமைக்கத் திட்டம்: பொது சேவைகளின் எண்ணிக்கை 300-ஆக உயர்வு

பொதுச் சேவைகளின் எண்ணிக்கை 300-ஆக உயர்த்தப்படும் என்றும், லோக் ஆயுக்த அமைக்க உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பொதுச் சேவைகளின் எண்ணிக்கை 300-ஆக உயர்த்தப்படும் என்றும், லோக் ஆயுக்த அமைக்க உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:-

 நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் அதிகரிக்க அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் பொதுச் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் அம்மா திட்டமும், மக்களின் குறைகளை 24 மணி நேரமும் தீர்க்கவல்ல அமைக்கப்பட்டுள்ள அம்மா அழைப்பு மையமும் ஆகும். மாநில முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 10,532 இ-சேவை மையங்களும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

 இ-சேவை மையங்களின் மூலம், தற்போது அளிக்கப்பட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுச் சேவைகளின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 300 வரை உயர்த்தப்படும்.

லோக் ஆயுக்த அமைப்பு: தற்போது அமைக்க திட்டமிடப்பட்டுள்ள லோக் ஆயுக்த அமைப்பு, தூய நிர்வாகத்தையும், பொறுப்புடைமையையும் உறுதி செய்து நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →