விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.65.17 லட்சம் இழப்பீடுக்கு ஆணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.65.17 லட்சத்திற்கு உத்தரவு ப
தற்போதைய செய்திகள்விருதுநகர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.65.17 லட்சம் இழப்பீடுக்கு ஆணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.65.17 லட்சத்திற்கு உத்தரவு ப
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1894 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.65.17 லட்சத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில், விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு கட்டட வளாகத்திலும், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு, சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ரா.தாரணி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அ.பசும்பொன் சண்முகையா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 என்.நித்யகலா, விரைவு குற்றவியல் நீதிபதி எம்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை நிர்வாக உதவியாளர் ஆ.பேச்சியப்பன் வரவேற்றார்.
மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிறு வழக்குகள், சிவில் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் 160 பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 14 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வுத் தொகை ரூ.40,64,500-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மோட்டார் தொடர்பான சிறு வழக்குகள், அபராதம் விதிக்கக் கூடிய சிறு வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் 1880 பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட்டது. இதில் தீர்வுத் தொகை ரூ.24,52,500-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதன்மை நிர்வாக அதிகாரி பி.ரவீந்திரன் நன்றி கூறினார்.