முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி சாவு

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவரை காப்பாற்ற சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவரை காப்பாற்ற சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை கணபதி நகரைச் சேர்ந்தவர் பூலோகமுருகன்(37). கட்டட மேற்பார்வையாளரான இவருக்கு மங்கம்மா என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பூலோகமுருகன், தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது மாமியார் ஊரான கும்மனூருக்கு சென்றார்.

அப்போது கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை கண்ட அவர்,  தனது வாகனத்தை சாலையோரமாக நிறுத்தி, விபத்தில் சிக்கியவருக்கு உதவும் செயலில் ஈடுபட்டார். 

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பூலோக முருகன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீஸôர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை கைபற்றி பிரேதபரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி வட்ட போலீஸர் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.