தற்போதைய செய்திகள்

குவாலியர் உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களில் 15 பறவைகள் உயிரழப்பு

DIN

குவாலியர்

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் காந்தி உயிரியல் பூங்காவில் கடந்த 3 நாட்களில் 15 பறவைகள் உயிரழந்துள்ளன.

இது அதிகாரிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பறவைகளில் ஜம்மு காஷ்மீரில் இருந்து வந்த நாரைகள் அதிகம் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த பறவைகளின் உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், மீண்டும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பறவை பாதுகாவலர்கள் முகமூடி அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பறவைகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியானதும்தான் தெரியவரும் என்று உயிரியல் பூங்கா மருத்துவர் உபேந்திரா குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT