தற்போதைய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜுங்கோ தாபேய் காலமானார்

DIN

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜப்பான் பெண்மணி ஜுங்கோ தாபேய்(77) புற்றுநோயால் வியாழக்கிழமை காலமானார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தனது குழுவினருடன் கடந்த 1975-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி அடைந்த தாபேய், உலகின் உயரமான சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.

எவரெஸ்ட் சிகரத்தோடு தனது மலையேற்ற பயணத்தை முடித்துக் கொள்ளாத தாபேய், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான சிகரங்களை அடைந்து 1992-ஆம் ஆண்டு சாதனை வரலாற்றில் இடம்பிடித்தார்.

தனது வாழ்வின் பெரும்பகுதியை மலையேற்றத்துக்காகவே செலவிட்ட தாபேய், உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மலைச் சிகரங்களில் ஏறியுள்ளார். ஜப்பானின் விவசாயக் குடும்பத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்த தாபேயின் மலையேற்ற பயணம் 4 வயதிலேயே தொடங்கியது. தனது ஆசிரியருடன் நாசு மலைச் சிகரத்தில் அவர் முதன்முறையாக ஏறினார்.

அவர் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மலையேற்ற ஏறும் பயணத்தை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT