தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டன் மருத்துவர் மீண்டும் அப்பல்லோ வருகை

DIN

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மீண்டும் அப்போலோ மருத்துவமனை வந்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனையடுத்து, முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த மாதம் 30-ஆம் தேதி முதன்முறையாக லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்ட் பீலே சென்னை வந்தார். அவரது ஆலோசனைபடியும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் தங்கியிருந்த ரிச்சர்ட் பீலே, கடந்த வாரம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனை வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, தனது சிகிச்சையை தொடர்கிறார்.

இதேபோன்று, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் பிரிவு மருத்துவர் கில்னானியும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT