தற்போதைய செய்திகள்

தாணே கால் சென்டர் மோசடி: மேலும் இருவர் கைது

DIN

தாணே கால் சென்டர் மோசடி தொடர்பாக 2 முக்கிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், தாணே நகரில் உள்ள சில கால் சென்டர் ஊழியர்கள் தங்களை அமெரிக்க நாட்டு வருமான வரித் துறையினர் என்று போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு அந்நாட்டினரிடம் பல கோடி டாலர் அளவுக்கு வசூலித்து மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக கால் சென்டர்களின் இயக்குநர்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்கள் 700 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷக்கி என்ற சாகர் தக்கர், ஜகதீஷ் கனானி ஆகியோரே இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, சாகரின் வழிகாட்டியான ஜகதீஷ் கனானியை போலீஸார் கடந்த 16-ஆம் தேதி கைது செய்தனர்.
இதனிடையே, தாணே காவல்துறையின் குற்றப்பிரிவினர், சம்பந்தப்பட்ட கால் சென்டர்களில் அதிரடிச் சோதனை நடத்தி வந்த நேரத்தில், சாகர் கடந்த 5-ஆம் தேதி, துபைக்கு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது. அதன்பின், "சாகர் தேடப்படும் நபர்' என்ற நோட்டீûஸ போலீஸார் கடந்த 7-ஆம் தேதி வெளியிட்டனர். அவரைக் கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சாகர் தக்கருக்கு நெருங்கிய தொடர்புடைய 2 பேரை தாணே குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த மோசடியில் முக்கியப் பங்கு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த மோசடியில் சிக்கி ஏமாந்த அப்பாவி அமெரிக்கர்கள் அனுப்பி வைக்கும் பணத்தை இந்த இருவரும் கையாண்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT