தற்போதைய செய்திகள்

ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை : ஜோதி பிரசாத் ராஜ்கோவா 

அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்றும், வேண்டுமென்றால் ..

IANS

அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்றும், வேண்டுமென்றால் அப்பதவியிலிருந்து தன்னை குடியரசுத் தலைவர் நீக்கிக் கொள்ளட்டும் என்றும் அந்த மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா தெரிவித்துள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை இருந்ததால் அங்கு சில மாதங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்ததற்கு ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவும் ஒரு காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதனை பலத்த பின்னடைவாக மத்திய அரசு கருதியது.
இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநில ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா உடல்நலம் பாதிக்கப்பட்டு அஸ்ஸôம் மாநிலம், குவாஹாட்டியில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து 47 நாள்களுக்குப் பிறகு (ஆக.13) அருணாசலப் பிரதேசத்துக்குத் திரும்பினார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி அப்பதவியிலிருந்து ராஜிநாமா செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குவாஹாட்டியைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, குவாஹாட்டியைச் சேர்ந்த எனக்கு நன்கு அறிமுகமான நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் பதவியிலிருந்து நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டதற்கு அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி, வேறொரு மத்திய அமைச்சரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த நபர் கூறியது உண்மை என்றும், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அருணாசலப் பிரதேச ஆளுநர் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்றும் கூறினார்.
உடல்நலப் பாதிப்பிலிருந்து நான் பூரணமாக குணமாகிவிட்டேன். அரசமைப்புச் சட்டப்  பதவியான ஆளுநர் பதவியில் எனது பணிகளை சிறப்பாகச் செய்து வருகிறேன்.
எனினும், நான் இந்தப் பதவியில் நீடிப்பதை அவர்கள் (மத்திய அரசு) விரும்பவில்லையெனில், பிரதமரும், அவரது அமைச்சரவையும் குடியரசுத் தலைவருக்குத் தெரியப்படுத்தி, அவர் என்னை இப்பதவியிலிருந்து நீக்கட்டும்.
அதுவரை நான் ராஜிநாமா செய்ய மாட்டேன். பதவி நீக்கத்துக்கான உத்தரவு கிடைத்தால் ஆளுநர் மாளிகையை காலி செய்வதற்கு ஏதுவாக கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் தயார் நிலையில் உள்ளேன்.
இந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் உள்பட யாரையும் நான் அணுகியது இல்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT