தற்போதைய செய்திகள்

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவக்கம்

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. "சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெக்சிகோ துணைத்தூதரகம் இந்தியா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை

IANS

மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. "சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெக்சிகோ துணைத்தூதரகம் இந்தியா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

மேலும் தென்னிந்தியாவிலிருந்து சுற்றுலா மற்றும் வியாபாரம் நிமித்தமாக மெக்சிகோ செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவும் உதவும்."என இந்தியாவிற்கான மெக்சிகோ தூதர் மெல்பா பிரியா தெரிவித்துள்ளார். 

சென்னை நீலாங்கரையில் திறக்கப்பட்டுள்ள இந்த தூதகரத்தின் மூலமாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். எனினும் இந்த தூதரகத்தில் மெக்சிகோ செல்வதற்கான விசா வழங்கப்படாது. 

மெக்சிகோ செல்ல விசா பெற விரும்புவோர் தில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகத்தை அணுக வேண்டும். மெக்சிகோ சார்பில் இந்தியாவில் அமைக்கப்படும் நான்காவது தூதரகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT