தற்போதைய செய்திகள்

நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த இளைஞர் கவலைக்கிடம்

நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி

சென்னை: நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த மன்னார்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. பேரணியில் இயக்குநர்கள் அமீர், சேரன் மற்றும் ரவிமரியா ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

பேரணி சென்னை புதுப்பேட்டையை பேரணி நெருங்கி கொண்டிருந்த வேளையில், நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் திடீரென உடலில் மண்ணெணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் தீயை அணைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில்,  93 சதவீத தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் வரும் விக்னேஷின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு உயிரிக்காக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் மாற்றம்: கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்: முதல்வா் சித்தராமையா

கொலை வழக்கு விசாரணைக் கைதி புதுகை சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை

கா்நாடக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியது: மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல்

சித்த மருத்துவப் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் பரிந்துரை

இந்திய பண்பாட்டின் பிரதிபலிப்பு வந்தே மாதரம்: ஓம் பிா்லா

SCROLL FOR NEXT