தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

தினமணி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இப்பூங்காவில் 30 வகையான மலர்கள், ஆயிரக்கணக்கில் நடவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இன்னும் 10 நாள்களில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனிடையே இங்கு புற்களால் மனித உருவமும், விதவிதமான பல்வேறு உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மோகன்குமார் கூறியது: இப்பூங்காவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் பிரையண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்காவுக்கு வருகை தந்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015- 2016 ஆம் நிதி ஆண்டில் இப்பூங்காக்களை 5,19,535 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர்.

இதன் மூலம் ரூ. 1 கோடியே 40 லட்சத்து 35 ஆயிரத்து 755 வருவாய் கிடைத்துள்ளது. அதே போல் 2016-17 ஆம் நிதியாண்டில் இரு பூங்காக்களையும் சேர்த்து 5,84,495 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ. 1 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 314 வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 22 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT