முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:16 PM
பகிர்:

சென்னை: சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.

இன்னும் கூடுதலாக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் இல்லத்தில் கடந்த 7-ஆம் தேதியன்று வருமான வரித்துறையினர் 'திடீர்' சோதனை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

நேற்று காலை 11.30 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் இரவு 7.20 மணி வரை தொடர் விசாரணை நடந்தது. 

இந்நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் தற்பொழுது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →