தற்போதைய செய்திகள்

விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு: பிரேமலதா விஜயகாந்த்

DIN

புதுதில்லி: தில்லி, ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற தேமுதிக.,வை சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண் சோறு சாப்பிட்டார். பின்னர் பேசிய அவர் அணைகள் வறண்டு காணப்படுகின்றன.

அவற்றை தூர் வார வேண்டிய சரியான தருனம் இது தான். தேசிய நெடுஞ்சாலைகளைப்போல் தேசிய நதிகளையும் இணைக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து நிர்வாகம் சரியில்லாமல் போனதால் விவசாயிகள் நலிவடைந்துள்ளனர்.

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு. தில்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் இதுவரை சந்திக்கவில்லை. விவசாயிகளின் பிரச்னை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் பெரும் பங்கு உள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT