முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி தலைமை அஞ்சலக  வளாகத்தில் தீ விபத்து: குளிர் சாதனங்கள் சேதம்

திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதனங்கள் சேதமடைந்தன.

Updated On : 19 ஏப்ரல், 2017 at 9:52 PM
பகிர்:

திருச்சி:  திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதனங்கள் சேதமடைந்தன.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் பிற்பகல் 1.30 மணியளவில் திடீரென புகை எழும்பியது. இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இதில் 3 குளிர்சாதன இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்காவிட்டால் பெருத்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என போலீஸôர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.