தற்போதைய செய்திகள்

விப்ரோவில் 600 பணியாளர்கள் திடீர் நீக்கம்

விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி

விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனம் விப்ரோ. இந்நிறுவனத்தின் கீழ் 1.96 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் விப்ரோ நிறுவனம் திடீரென 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பற்றி அந்நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனிடையே விப்ரோவின் 4ஆவது காலாண்டு மற்றும் முழுவருட பணியாளர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கை வருகிற 25ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விசா நடைமுறைகள் சமீபகாலமாக கடுமையாக்கப்பட்டு வருவதால் பணியாளர்களை அனுப்புவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT