தற்போதைய செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்துசட்ட மசோதா நிறைவேறியது

DIN

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2012 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசானது 2012 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. அதாவது தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதென தீர்மானித்திருந்தது.

இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் பின்னர் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT