கோவாவில் 2,000 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்
கோவாவில் இன்று சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதவி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பனாஜி: கோவாவில் இன்று சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதவி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மாநில தலைநகர் அருகே உள்ள இரு நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை மாநில கலால் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி குணால் கூறினார்.
மாநில தலைநகர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலிருந்து 972 லிட்டர் மதுபாட்டில்களும், புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலிருந்து 1,422 லிட்டர் மாது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மதிப்பு சுமார் ரூ.16.57 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலால் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.