தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுநரை வலியுறுத்தினோம்: முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜன்

DIN

பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது நடைபெற்ற ஜனநாயகத்துக்கு விரோதமான போக்கை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்று ஓ. பன்னீர் செல்வம் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து வலியுறுத்தினார்.

அவருடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பாண்டிய ராஜன்  எதிர்க்கட்சியினரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது

மேலும் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுநரை வலியுறுத்தினோம் என பாண்டியராஜன் தெரிவித்தார். மேலும் இந்த அரசு முறையான அதிமுக அரசு இல்லை. பொதுமக்களின் ஆதரவு பெறாத இந்த அரசின் நிலை இன்னும் கொஞ்ச நாளில் தெரியவரும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT