முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீஆண்டாள் கோவில் கல்தூண் மண்டபம் இடித்து தரைமட்டம்: ஒருவர் மீது வழக்கு

தற்போதைய செய்திகள்

ஸ்ரீஆண்டாள் கோவில் கல்தூண் மண்டபம் இடித்து தரைமட்டம்: ஒருவர் மீது வழக்கு

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:47 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான புரதானமிக்க கல்மண்டபம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் ஒருவர் மீது இன்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூர உற்சவத்தின் 5ஆம் திருநாள் ஊத்துமலை பரதேசி கட்டளைக்குரிய சொத்தான புரதானமிக்க கல்தூண் மண்டபம், தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே உண்டு. இந்த மண்டபம் அண்மையில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர், சிவகாசி சார் ஆட்சியரிடம் 11.1.17-ம் தேதி புகார் செய்தார். சார் ஆட்சியர் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் நகர் காவல் ஆய்வாளர் ஜே.மகேஸ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திராநகர் எஸ்.சத்தியசீலன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →