தற்போதைய செய்திகள்

90 சதவீத ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே விரும்புகின்றனர்: சுஷில்குமார் மோடி

லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விருப்பம் இல்லாமல் உள்ளனர்.

DIN

லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விருப்பம் இல்லாமல் உள்ளனர். 90 சதவீத ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பா.ஜ..கவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகின்றனர்  என்று பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். 

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேற்று புதன்கிழமை மாலை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் பிகாரில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் - லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்த மகா கூட்டணி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இன்று காலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் நிதீஷ் குமார் முதல்வர் பொறுப்பேற்றார். துணை முதல்வராக பா.ஜ.க வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று அவர் பேசும் போது ஊழல் குறித்து நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். லாலு அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.  90 சதவீத ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பா.ஜ..கவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT