பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிந்து 31,190 புள்ளிகளாக உள்ளது.
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிந்து 31,190 புள்ளிகளாக உள்ளது. நிப்டி 37 புள்ளிகள் சரிந்து 9,637 புள்ளிகளாக உள்ளது.
இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 31,430.32 புள்ளிகளாக இருந்தது.
அதேநேரத்தில் தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9,709.30 புள்ளிகளாக உயர்ந்து காணப்பட்டது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.64.32-ஆகவும் இருந்தது.