தற்போதைய செய்திகள்

செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்

செய்யது பீடி குழும அலுவலகங்கள், உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில்

DIN

செய்யது பீடி குழும அலுவலகங்கள், உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் செய்யது பீடி தயாரிப்பு குழுமம் ரூ.90 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செய்யது பீடி குழும தலைமை அலுவலகம், பிற அலுவலகங்கள், உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் என, 6 மாநிலங்களில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றர்.

தமிழ்நாட்டில் சென்னையில் 3 இடங்களிலும், திருநெல்வேலியில் 28 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதில், திருநெல்வேயில் செய்யது பீடி குழும நிர்வாகி ஒருவரின் வீட்டில், கணக்கில் வராத ரொக்கப் பணம் 3 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை பெல்ஸ் சாலையில் அக்குழுமத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

ஏறுமுகத்தில் இந்திய ஏற்றுமதி

வோடஃபோன் ஐடியா இழப்பு அதிகரிப்பு

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

SCROLL FOR NEXT