முகப்பு
தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்:  அன்புமணி ராமதாஸ் பேட்டி

Updated On : 3 மார்ச், 2017 at 6:41 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில்நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கசெல்லும் வழியிóல் திருச்சி வந்த அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி வருங்காலங்களில் மீததேன் திட்டம் போன்று நடைபெறாமல் இருக்க காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்காக மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். மத்திய அரசும் இதை ஏற்று அறிவிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிóடடபிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கர்நாடக அரசுக்கு சாதகமாக மத்திய அரசுசெயல்பட்டு வருகிறது. தமிழகத்தை காப்பாற்ற நாங்கள் எந்த அளவிற்கும் தயாராக இருக்கிறோம். இந்த நாசத்துக்கு மத்திய, மாநில அரசுகளும், தமிழகத்தை50 ஆண்டுகள் ஆண்ட திமுக, அதிமுகவும்தான். எனவே எந்தவொரு நல்லத்திட்டத்தையும் கொண்டு வரப்போவதில்லை.

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது. தமிழகத்துக்கு, 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. நீட் தேர்வை சமச்சீர்க் கல்வி பயன்ற மாணவர்கள் எழுத முடியாது. மாநிலங்களின் உரிமையை எப்படியாவது பறிக்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது.

திமுகவும், அதிமுகவும்தான் மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டுள்ளது. இது பிள்ளையையும் கிள்ளிóவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாகஉள்ளது என்றார் அன்புமணி ராமதாஸ். பேட்டியின் போது, பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.