தற்போதைய செய்திகள்

ஆர்.கே.பேட்டையில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

DIN

ஆர்.கே.பேட்டையில் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ரூ. 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்தனர்.

 திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் கடத்திச்செல்வதாக கடத்தப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையெடுத்து மாவட்ட எஸ்.பி. சாம்சன் தலைமையில் ஆந்திர சாலையோ எல்லைகளில் தமிழக போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்.கே.பேட்டை பஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி வந்த கார் ஒன்று போலீசாரை கண்டதும் சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு காரில் இருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பின்னர் போலீசார் காரை சோதனை செய்ததில் 5 அடி நீலமுள்ள 29 செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் போலீசாரா பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருத்தணி வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக அடிக்கடி செம்மரங்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT