முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் ஏ.எப்.டி பஞ்சாலையை திறக்க வலியுறுத்தி சாலைமறியல்: 50 பேர் கைது

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி அரசு பஞ்சாலையினை திறக்க வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கு மேற்பட்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஏ.எப்.டி அரசு பஞ்சாலையினை திறக்க வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசு பொதுத்துறை நிறுவனமான ஏ.எப்.டி ஆலை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலக மூடப்பட்டுள்ளது. இதனால் அதில் பணியாற்றி வந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறி தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் மூடிக்கிடக்கும் பஞ்சாலை திறக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் தர வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாத ஊதியத்தை வழங்க வேண்டும், தொழிலீட்டு படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், ஏஎப்டி ஆலை மூலம் இலவச துணிகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலையை இயக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசிடம் ரூ.500 கோடி புனரமைப்பு நிதியை பெற வேண்டும், ஏற்கெனவே நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடலூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத் தலைவர் டி.ரவி தலைமை தாங்கினார். பொதுச் செயலர் விஎஸ்.அபிஷேகம், பொருளாளர் து.தேசிகன் உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 50-க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.