தற்போதைய செய்திகள்

அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: ஏ.சி.சண்முகம்

அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

DIN

ஆரணி: அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

ஆரணிக்கு வந்திருந்த ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளரும் நாடுகளில் வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலும் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிமுக இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக உருவானபோது அதில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். அதிமுக உடைந்து செல்வதை நான் விரும்பவில்லை.

தற்போதைய பிரச்னையால் அரசு நிர்வாகம் செயல்படாமல் உள்ளது. மக்கள் நலன் கருதி இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவில் வறட்சி, வெள்ளப் பெருக்கு மாறி மாறி ஏற்படுகிறது. எனவே, நதிகளை இணைக்க வேண்டும். விவசாயி அய்யாக்கண்ணுவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழகத்தின் நலன் கருதி "நீட்' தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதனை சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களால்தான் எழுத முடியும் என்ற நிலை உள்ளது.

இதனால், தமிழகத்தில் 90 சதவீதம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

SCROLL FOR NEXT