முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.100 கோடி மதிப்புள்ள மல்லையாவின் பண்ணை வீடு - கையகப்படுத்தியது அமலாக்கத் துறை

17 ஏக்கர் பரப்பளவில் உள்ள மல்லையாவின் பண்ணை வீட்டை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:33 PM
பகிர்:

மல்லையாவின் 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.  

பல்வேறு வங்கிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு, அந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனுக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து, மல்லையாவின் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பண்ணை வீடுகள், பங்குகள், வைப்பு நிதித் தொகை, மல்லையாவின் பெயரில் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றை முடக்க அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் உத்தரவு பிறப்பித்தது.

அவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6,630 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆவணங்களில் மொத்தம் ரூ.4,234 கோடி என்றே அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மல்லையாவின் 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

மாண்ட்வா ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் உள்ள இதன் மதிப்பு ரூ.100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் பகுதியில் இந்த பண்ணை வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.