தற்போதைய செய்திகள்

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிக்கு அனுமதியில்லை: இந்திய ரிசர்வ் வங்கி

DIN

புதுதில்லி: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி துவங்குவதற்கான அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என தீர்மானத்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சமவாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய வங்கி துவங்கும் திட்டம் துவங்குவதற்கான அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் தீர்மானத்திருப்பதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அல்லது ஷரியா வங்கியானது இஸ்லாமியத்தின் வழக்கப்படி வட்டி வசூலிக்காமல் கடன் வழங்கும் கொள்கைகளின் அடிப்படையிலான விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட நிதி அமைப்பாகும். இந்த வங்கிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT