முகப்பு
தற்போதைய செய்திகள்

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: புதுவை பல்கலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

புதுச்சேரி:  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகத்தில் அமைதியான சூழல் அமைய உத்தரவிடக்கோரி மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2015ம் ஆண்டு நடந்த வன்முறையில் பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இப்போராட்டம் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலை பாதிப்பதுடன் மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட  நடவடிக்கை குறித்து காவல்துறை டிடிஜிபி ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், டிஜபி ஆஜராகவில்லை. எனவே, அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தது.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி எஸ்.கே. கெüதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும், வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை கைது செய்யலாம்  உரிய அடையாள அட்டை இல்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி புதுவை பல்கலையில் வியாழக்கிழமை முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள், ஊழியர்கள், என அடையாள அட்டை காண்பித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
50 போலீஸôர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எவராக இருந்தாலும் அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →