முகப்பு
தற்போதைய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரபிரதேசத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

Updated On : 22 நவம்பர், 2017 at 12:39 PM
பகிர்:

லக்னோ: உத்தரபிரதேசத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

முதல் கட்டமாக, ஐந்து மாநகராட்சினிலும், 71 நகர் பரிஷாத்களிலும், 154 நகர் பஞ்சாயத்துகளிலும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதையடுத்து ஷாம்லி, மீரட், பிஜ்னோர், பதான், ஆக்ரா, கான்பூர், சித்ரகூடம், உன்னாவ், அமேதி, பைசாபாத், கோண்டா, கோரக்பூர், ஆசம்கர், காசிப்பூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 5 நகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Advertisement

பதிவான வாக்குகள் டிசம்பர் 1-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.