தற்போதைய செய்திகள்

எம்ஜிஆர் வெப் டிவியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி 

DIN

மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், 25 ஆவது மாவட்டமாக தூத்துக்குடி கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. 

விழாவுக்கு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின்போது, எம்ஜிஆரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ. 380.94 கோடி மதிப்பிலான 214 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.  

மேலும் ரூ. 8.08 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.  மலேசியாவில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் வெப் டிவியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT