தற்போதைய செய்திகள்

தில்லியில் பெண் நீதிபதியை கடத்த முயற்சி: கார் ஓட்டுநர் கைது

DIN

புதுதில்லி: தில்லியில் பெண் நீதிபதியை கடத்த முயன்ற வாடகை கார் ஓட்டுநரை போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தில்லியில் பெண் நீதிபதி ஒருவர் கர்கர்டூமா நீதிமன்றத்திற்கு செல்வதற்காக கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். ஆனால் ஓட்டுநர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை என்எச்24 வழியே ஹாப்பூரை நோக்கி சென்றுள்ளார்.

இதனால் பெண் நீதிபதி போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சக நீதிபதியிடமும் இந்த தகவலை உதவிக்கான அழைப்புகளை விடுத்துள்ளார்.  .

சிறிது தொலைவு சென்ற பின்னர் ஓட்டுநர் காரை திருப்பி தில்லியை நோக்கி ஓட்டி வந்துள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காஜ்பூர் போலீஸார் காரை காஜ்பூர் சுங்க சாவடி பகுதியில் தடுத்து நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். 

விசாரணையில் அவரது பெயர் ராஜீவ் எனவும் துரதிருஷ்டவசம்தாக தான் பாதை மாறி சென்று விட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் நிறுவன ஓட்டுநர் ராஜீவ் மீது காஜ்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT