முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டம் ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த

Updated On : 11 அக்டோபர், 2017 at 8:20 AM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டம் ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஹஜின் எல்லை பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் தற்போது நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.