தற்போதைய செய்திகள்

தமிழக சட்டப்பேரவையின் பொறுப்பு செயலளாராக இருந்த பூபதி பணி நிரந்தரம்: ஆளுநர் உத்தரவு 

தமிழக சட்டப்பேரவையின் பொறுப்பு செயலளாராக இருந்த பூபதி பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவையின் பொறுப்பு செயலளாராக இருந்த பூபதி பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் ஜமாலுதின் பணிகாலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய சட்டப்பேரவை பொறுப்பு செயலாளராக பூபதி நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் பொறுப்பு செயலாளர் பூபதி பணியினை நிரந்தரமாக்கி, அதன் உத்தரவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கியுள்ளார். 1991 -இல் சட்டப்பேரவைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் என பணியைத் தொடங்கிய பூபதி, கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் நிலைக்கு உயர்ந்தார்.

தற்போது பேரவையின் பொறுப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., (வரலாறு), பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பட்டமும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல்., பட்டமும் பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இவரது பணிக்காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT