முகப்பு
தற்போதைய செய்திகள்

​ உ.பி: மனித வெடிகுண்டு என்று கூறி எச்டிஎப்சி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது

உத்தரப்பிரதேசத்தில் மனித வெடிகுண்டு என்று கூறி எச்டிஎஃப்சி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:40 PM
பகிர்:

சந்த்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மனித வெடிகுண்டு என்று கூறி எச்டிஎஃப்சி வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்த்பூர் கிளையில் நேற்று மாலை நுழைந்த மர்ம நபர் ஒருவர், தனது இடுப்பைச்ச சுற்றி போலி வெடிகுண்டுகள் போன்ற பொருளைக் காட்டியிருந்தார். தான் மனித வெடிகுண்டு என்றும், தனக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். வங்கிக்கு வந்த போலீஸார் குறிப்பிட்ட நபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரோத்தாஷ் என்பதும், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →