ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள, கிரிக்கெட் வீரர்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்துள்ள, கிரிக்கெட் வீரர்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், 'சென்னை சூப்பர் கிங்ஸ் - கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணிகள் மோதிக்கொள்ளும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நாளை செவ்வாய்கிழமை (ஏப் 10) நடைபெற உள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து, கடையடைப்பு, ரயில் மறியல், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என பல தரப்பினரும், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
Advertisement
சில அரசியல் கட்சியினர், சேப்பாக்கம் மைதானத்திற்குள், ரசிகர்கள் போல ஊடுருவி, ரகளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மைதானத்தை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுப்பிரிவு போலீஸார், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ப்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், மும்பையில் இருந்து விமானத்தில் நேற்று சென்னை வந்தனர். அவர்கள், அடையாறில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டலுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிக்காக மைதானத்திற்கு, அழைத்துச் செல்லப்படுகின்ற போது, அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என, போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
'கிரிக்கெட் வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும் கூடுதல் ஆணையர்கள் தலைமையில், 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.