முகப்பு
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் 

நாளை ஏப்ரல் 10-ம் தேதி பாரத் பந்த் நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் சில குழுக்கள் செய்திப் பரப்பி வருவதையடுத்து

Updated On : 9 ஏப்ரல், 2018 at 5:20 PM
பகிர்:

புதுதில்லி:  நாளை ஏப்ரல் 10-ம் தேதி பாரத் பந்த் நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் சில குழுக்கள் செய்திப் பரப்பி வருவதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பை முடுக்கிவிடும்படியும் தடையுத்தரவை மீறுதல் உள்ளிட்ட அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேவைப்பட்டால், மேற்கொள்ளும்படியும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது. உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ நேருவதைத் தடுப்பதற்காகப் பதற்றம் ஏற்படும் எல்லா இடங்களிலும் தீவிர ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் அறிவுரை கூறியுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறைக்  கண்காணிப்பாளர்கள் தத்தமது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.